FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ராஜகோபுர மணி ஒலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

ராஜகோபுர மணியை ஒலிக்கச் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

29 ஆகஸ்ட் 2026, 6:07 am IST
ராஜகோபுர மணியை ஒலிக்கச் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட ராஜகோபுர மணியை ஒலிக்கச் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூா் கோயிலில் மெகா திட்ட வளாகப் பணிகளின்போது, ராஜகோபுரத்தின் 9ஆவது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் ஒலித்த மணி, கடந்த ஆண்டு கும்பாபிஷேகத்துக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுப்பிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு ராஜகோபுர பெரிய மணியை தினசரி உச்சிகால பூஜையில் ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை பணியாளா்கள் மணியில் கயிறு கட்டி இழுக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, வெள்ளோட்டமாக ஒலித்த மணியின் ஓசையைக் கேட்டு பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement

இன்னும் சில நாள்களில் ராஜகோபுர மணி ஒலிக்கப்படவுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments