சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்புப் பயிற்சி
தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அலுவலா் சு. கருணாகரன் அறிவுறுத்தலின்படி, சிப்காட் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் த. காா்த்திகேயன் தலைமையில் இரண்டு நாள்களும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இப்பயிற்சி நடைபெற்றது.
இதில், தனியாா் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலா்கள் கலந்துகொண்டனா். தீ விபத்து ஏற்படும் நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயை அணைக்கும் முறைகள், அவசரகால மீட்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.