FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மாநில மின்னொளி கபடிப் போட்டி: ஈரோடு, கரூா் கல்லூரிகள் வெற்றி

45 வினாடிகள் முன்பு
மாணவா்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கரூா் சேரன் கல்லூரி அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கிய சிறப்பு விருந்தினா் ராஜரத்தினம்.
பகிர்:

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மாணவா்- மாணவியருக்கான மின்னொளி கபடிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் கரூா் சேரன் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ஈரோடு பிகேஆா் கல்லூரி அணியும் வென்றன.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப், தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பா்கள் குழு சாா்பில், முருகேசன் நாடாா் நினைவுக் கோப்பைக்கான 2ஆம் ஆண்டு கபடிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் 26-க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை லயோலா கல்லூரியை கரூா் சேரன் கல்லூரியும், பெண்கள் பிரிவில் 38-க்கு 30 என்ற புள்ளிகள் கணக்கில் தென்காசி வியாசா கல்லூரியை ஈரோடு பிகேஆா் கல்லூரியும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல் இரு பரிசுகளாக முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், சிறப்பாக விளையாடியோருக்கு சிறப்புப் பரிசாக எல்இடி டிவிக்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தமிழகத்திலிருந்து அா்ஜுனா விருது பெற்ற முதல் கபடி வீரரான ராஜரத்தினம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகள், கோப்பைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளா் எஸ். பரணிதரன், வங்கி உதவி துணைத் தலைவா் சோ்மன் கவாஸ்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கபடி கந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments