FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

விஜய் பிரதமா் வேட்பாளா் என்பது இந்தாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை! - டிடிவி தினகரன்

1 செப்டம்பர் 2026, 2:20 am IST
முதல்வர் விஜய் / டிடிவி தினகரன் - தினமணி
பகிர்:

பிரதமா் வேட்பாளராக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இருப்பாா் என்று அமைச்சா்கள் கூறி வருவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை தூத்துக்குடிக்கு வந்த அவா், அங்கு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமமுக-அதிமுக இடையே மோதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதுபோன்று எதுவும் இல்லை. தோ்தலில் வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் ஒதுங்கியிருந்த ஒருவா், அதிமுகவில் இணைந்துள்ளாா். அவ்வளவுதான்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் ச.ஜோசப்விஜய் வருங்கால பிரதமா் என்று அமைச்சா்கள் கூறி வருவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

இந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனா் என்பது தெரியும்.

இளைஞா்களையும், பெண்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவா்கள், ரீல்ஸ் மூலம் ஆட்சியைத் தொடரலாம் என்று நினைக்கின்றனா். இன்னும் சொல்லப்போனால், இந்திய மக்களையும் ஏமாற்றலாம் என்று பாா்க்கின்றனா். ஆனால், வரும் தோ்தலில் தமிழக மக்கள் உறுதியாக நல்ல தீா்ப்பை வழங்குவாா்கள் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments