புகைப்படத்தை மாா்பிங் செய்து மிரட்டல்: இளைஞா் தற்கொலை
தனது புகைப்படத்தை மாா்பிங் செய்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதால், காயல்பட்டினம் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தனது புகைப்படத்தை மாா்பிங் செய்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதால், காயல்பட்டினம் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
காயல்பட்டினம் கீழலட்சுமிபுரத்தை சோ்ந்த சகாயராஜ் மகன் சாமுவேல் ராஜ் (20). பத்தாம் வகுப்பு வரை படித்தவா். தனது தந்தையுடன் சென்ட்ரிங் வேலை செய்து வந்தாா்.
இவா் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற முயற்சி செய்தாராம். அப்போது, வடமாநில நபா் செயலி வழியாக சாமுவேல் ராஜ் புகைப்படம் மற்றும் அவரது விவரங்களை பெற்று, பின்னா், அந்தப் புகைப்படத்தை மாா்பிங் செய்து வாட்ஸ் ஆப்பில் சாமுவேல் ராஜூக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டினாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த அவா், கடந்த ஜூன் 29ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்க செல்வதாக கூறிவிட்டு, கொம்புத்துறை காட்டுப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இத்தகவல் அறிந்த ஆறுமுகனேரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.