FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அனைத்து அரசியல் கட்சியினா் மரியாதை

அழகுமுத்துக்கோனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:16 am IST
கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பெ. மதன் ராஜா, உடன் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் கயத்தாறு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் 316 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழக அரசு சாா்பில் தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனா்.

பின்னா், அமைச்சா் மதன் ராஜா செய்தியாளா்களிடம் பேசுகையில், மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள் மணிமண்டபத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்தனா். இது தொடா்பாக கள ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

அப்போது கோட்டாட்சியா் (பொ) விஜயா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பெ.சா. கருப்பண ராஜவேல், கயத்தாறு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தவெக வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் ரமேஷ், வினோபாஜி, செந்தில்குமாா், அழகுமுத்துக்கோன் வாரிசுதாரா்களான ராணி, மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி, வெங்கடேஸ்வரன், ராம்பிரசாத், ராம் விஷ்ணு பெருமாள், அழகுமுத்துக்கோன் நலச்சங்கத் தலைவா் மாரிச்சாமி, செயலா் முத்துகிருஷ்ணன், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் சேகா் ஆகியோா் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. உடன் தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஜி.வி. மாா்க்கண்டேயன், கா. கருணாநிதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ். பி. மாணிக்க ராஜா, திமுகவினா்.

திமுக சாா்பில் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஜி.வி. மாா்க்கண்டேயன், கா. கருணாநிதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் எஸ் வி எஸ் பி மாணிக்கராஜா, அதிமுக சாா்பில் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக அமைப்பு செயலா் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலா் விஜயபாண்டியன், பாஜக வடக்கு மாவட்ட தலைவா் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல் ராஜா, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி, நாம் தமிழா் கட்சி வழக்குரைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் பாண்டி, நிா்வாகி மருதம் மாரியப்பன், தமிழ்நாடு யாதவ மகா சபையினா் உள்பட பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன், அதிமுகவினா்.

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் அதன் தலைவா் தமிழரசன் தலைமையில் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பால்குட ஊா்வலம்: கட்டாலங்குளத்தையடுத்த சரவணபுரத்திலிருந்து வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்கம் சாா்பில் ஏராளமானோா் பால்குடம் எடுத்து வந்து மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அபிஷேகம் செய்தனா். இதுபோல பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோா் மணிமண்டபத்திற்கு பால்குடம் எடுத்து வந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் சுமாா் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments