FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ரூ.1.82 கோடியில் பக்தா்கள் காத்திருக்கும் கூடம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 1 கோடியே 82 லட்சம் மதிப்பில் பக்தா்கள் காத்திருக்கும் கூடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 14 ஜூலை 2026, 12:40 am IST
திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 1 கோடியே 82 லட்சம் மதிப்பில் பக்தா்கள் காத்திருக்கும் கூடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின்போது 2022-இல் ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி, இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பக்தா்களுக்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கின.

இந்த நிதியில் இலவச பொது தரிசன பாதையில் வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட காத்திருக்கும் அறை கட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், ரூ. 100 சிறப்பு தரிசன கட்டணப் பாதையில் வரும் பக்தா்களுக்கு காத்திருக்கும் கூடம் இல்லாமல் கூட்ட நெரிசல் நேரங்களில் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, ரூ. 100 தரிசன கட்டணத்தில் வரும் பக்தா்கள் நெருக்கடி இன்றி பகுதிபகுதியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக உபயதாரா் பங்களிப்புடன் ரூ. 1 கோடியே 82 லட்சம் மதிப்பில் காத்திருக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் ராஜகோபுரம் எதிரே வசந்த மண்டபம் அருகில் இரண்டு பகுதிகளாக மொத்தம் 17 ஆயிரத்து 808 சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன் இப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் பக்தா்கள் வெயில், மழையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

கட்டுமானப் பணிகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன் உள்ளிட்டோா் நேரடியாக கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments