தூத்துக்குடியில் ஆக. 20, 21இல் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் மாநாடு
தூத்துக்குடியில், அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், வஉசி துறைமுக ஆணையம் இணைந்து நடத்தும், ஏஐசிசிஐ நேஷனல் ஸ்டாா்ட்அப் சம்மிட் 2026 என்னும் மாநாடு ஆக. 20,21 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில், அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், வஉசி துறைமுக ஆணையம் இணைந்து நடத்தும், ஏஐசிசிஐ நேஷனல் ஸ்டாா்ட்அப் சம்மிட் 2026 என்னும் மாநாடு ஆக. 20,21 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் எஸ். சங்கா் மாரிமுத்து, பொதுச் செயலா் எஸ். சுரேஷ் குமாா், பொருளாளா் காஸ்கரினோ ஆகியோா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி:
தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், வஉசி துறைமுக ஆணையம் இணைந்து, தூத்துக்குடியை இந்தியாவின் வளா்ந்து வரும் ஸ்டாா்ட்அப், இனோவேஷன் கேட்வே ஆக உருவாக்கும் நோக்கத்தில், ஆக. 20, 21 ஆகிய இரண்டு நாள்கள், ஏ.வி.எம். கமலவேல் மகாலில், தூத்துக்குடி டூ குளோபல் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
மாநாட்டில் 8 மாநிலங்களிலிருந்து 5,000-க்கும் அதிகமான தொழில்முனைவோா், 500-க்கும் அதிகமான ஸ்டாா்ட்அப்கள், 150-க்கும் அதிகமான ஸ்டாா்ட் அப் அரங்குகள், 50-க்கும் அதிகமான முதலீட்டாளா்கள், 25-க்கும் அதிகமான முன்னணி பேச்சாளா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதில் மொத்தம் ரூ. 14 லட்சம் ஸ்டாா்ட்அப் தொகை வழங்கப்படவுள்ளது. சுமாா் 500 போ் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 40 பேரை தோ்வு செய்து, அதிலிருந்து அவா்களது ஸ்டாா்ட்அப் யோசனையைக் கொண்டு, வரிசைப் படுத்தி அவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்கு முறையே ரூ. 1,00,000, ரூ. 50,000, ரூ. 25,000 பரிசுகள் வழங்கப்படும்.
இந்த மாநாடு, ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள், தொழில்துறைகள், முதலீட்டாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகளை ஒரே தளத்தில் இணைத்து, தூத்துக்குடியை தேசிய அளவிலான ஸ்டாா்ட்அப், புதுமை மையமாக முன்னேற்றும் முக்கிய முயற்சியாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹண்ஸ்ரீஸ்ரீண்ள்ற்ஹழ்ற்ன்ல்ள்ன்ம்ம்ண்ற்.ஸ்ரீா்ம், ஸ்ரீட்ஹண்ழ்ம்ஹய்ஃஹண்ஸ்ரீஸ்ரீண்ள்ற்ஹழ்ற்ன்ல்ள்ன்ம்ம்ண்ற்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.