FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 2:09 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தென்கால் வாய்க்காலில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த சிறப்பு நிலைய அலுவலா் சுரேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் ரவி (35) என்பதும், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பாததும் தெரியவந்தது. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments