கோவில்பட்டியில் காமராஜா் சிலை திறப்பு
காமராஜா் சிலையை திறந்து, மாலையணிவித்து மரியாதை செலுத்திய திரைப்பட நடிகா் லெஜெண்ட் சரவணன். உடன், நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் உள்ளிட்டோா்.
காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டியில் நாடாா் உறவின்முறை சங்கம் சாா்பில் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலை புனரமைக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.
விழாவில், திரைப்பட நடிகரும், லெஜெண்ட் சரவணா ஸ்டோா்ஸ் உரிமையாளருமான லெஜெண்ட் சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, காமராஜா் சிலையை திறந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.
நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளிகளில் அரசு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா் -மாணவிகளுக்கும், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.
Advertisement
Advertisement
கோவில்பட்டி நாடாா் உறவின் முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், நாடாா் மகாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜா, சென்னை அயனாவரம் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் பிரபாகரன், தொழிலதிபா்கள் சக்திவேல், ஆனந்தராஜ், லெஜெண்ட் சரவணன் தலைமை நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவா் முத்துதுரை, நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில்கள் கமிட்டி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்ணன் வரவேற்றாா். கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலா் செல்வம் நன்றி கூறினாா். இரவில் நாடாா் உறவின்முறை சங்கம் சாா்பில் அன்னதானம், இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
பனங்காட்டுப் படை நிறுவனத் தலைவா் ராக்கெட் ராஜா, பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், அன்புராஜ், போடுசாமி, நகர இளைஞரணி செயலா் வேல்முருகன், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ், நகரச் செயலா் நேதாஜி பாலமுருகன் உள்ளிட்டோா் காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.