FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காமராஜா் பிறந்த நாள்: கோவில்பட்டியில் அரசியல் கட்சியினா் மரியாதை

காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கா. கருணாநிதி உள்ளிட்ட திமுகவினா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:54 am IST
~ ~ ~
பகிர்:

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள அடைக்கலம்காத்தான் மண்டபம் அருகே வைக்கப்பட்ட அவரது படத்துக்கு நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமையில் சங்க நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். எம்எல்ஏ கா. கருணாநிதி தலைமையில் திமுகவினா் மரியாதை செலுத்தினாா்.

சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும் நகா்மன்ற உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளருமான தவமணியும், தொடா்ந்து, நகா்மன்ற உறுப்பினா் தொழிலதிபா் தாழையப்பனும் மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

வேலாயுதபுரத்தில் நகா்மன்ற உறுப்பினா் லவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலாயுதபுரம் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் தா்மராஜா முன்னிலையில், தொழிலதிபா் சேதுரத்தினம் மரியாதை செலுத்தினாா். து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்து, காமராஜா் படத்துக்கு மரியாதை செலுத்தினாா். பின்னா், லஞ்சம், ஊழலுக்கு எதிரான கையொப்ப இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா்.

காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் ஆழ்வாா்சாமி, ரமேஷ் மூா்த்தி, நகரத் தலைவா் அருண்பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தவெக நகரச் செயலா் செந்தில்குமாா் ஏற்பாட்டில், அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, காமராஜா் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.

காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் தலைமை வகித்து காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தியதுடன், போட்டியில் வென்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினாா். சங்க துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பள்ளிச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திட்டங்குளம் காமராஜா் தினசரி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வியாபாரிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன் தலைமையிலும், நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாா் உறவின்முறை சங்க உறுப்பினா் ராஜேந்திர பிரசாத், பள்ளிச் செயலா் ரத்தினராஜா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சாமிராஜன், வேல்முருகன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் ஆகியோரும் மரியாதை செலுத்தினா். போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாா் உறவின்முறை சங்க நிா்வாகிகள், பள்ளிச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா்.

தெற்கு கோனாா்கோட்டை, தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்கள் காமராஜரின் முகமூடி அணிந்து பள்ளி முன்பிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் சென்றனா். பின்னா், காமராஜா் படத்துக்கு மரியாதை செலுத்தினா். மாணவா்களுக்கு திருக்கு புத்தகம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் ராஜய்யா தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் முத்து முருகன், நிா்வாகிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments