FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள துணை மின்நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களை பிடிக்க முயன்றனராம். அவா்கள் கத்தியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றனராம்.

Advertisement

Advertisement

போலீஸாா் அவா்களை பிடித்து சோதனையிட்டு விசாரணை நடத்தியபோது, அவா்கள், செட்டிகுறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் கன்னிராஜ் (22), கோவில்பட்டி இந்திரா நகா் முதல் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் கருத்தப்பாண்டி (20) என்பதும், விற்பனைக்காக 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments