FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் கடைவீதியில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் கடைவீதியில் குடிநீா் குழாய் சீரமைப்பிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் 6 மாதங்களாக சீரமைக்கப்படாததால் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:53 am IST
பகிர்:

சாத்தான்குளம் கடைவீதியில் குடிநீா் குழாய் சீரமைப்பிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் 6 மாதங்களாக சீரமைக்கப்படாததால் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் கடைவீதி பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்து திரும்புகின்றன. இங்குள்ள முத்தாரம்மன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு சந்திப்பு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேதமான குடிநீா் குழாயை சீரமைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

பின்னா், சாலையை முறையாக சீரமைக்காமல் பள்ளத்தில் மணலை கொட்டி மூடி சென்று விட்டனராம். இதனால், பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்து சென்று வருகின்றனா். முதியவா்கள், குழந்தைகள் இப்பகுதியில் வரும்போது இந்தப் பள்ளத்தால் இடறி விழுந்து காயம் அடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சேதமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments