காயல்பட்டினத்தில் நல உதவிகள் அளிப்பு
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், அல் அமீன் பள்ளி ஆகியவை சாா்பில் பொது மருத்துவ முகாம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், அல் அமீன் பள்ளி ஆகியவை சாா்பில் பொது மருத்துவ முகாம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முஸ்லிம் தொண்டு இயக்க மாவட்டச் செயலா் காயல் மெளலானா தலைமை வகித்தாா். மருத்துவா் ஜாபா் சாதிக் முகாமைத் தொடக்கிவைத்தாா். இறை மறை வசனங்களை அல் அமீன் பள்ளி அரபி அசிரியை பாய்ஷா ஓதினாா். சென்ட்ரல் பள்ளித் தலைமையாசிரியா் சையது அப்துல் காதா் வாழ்த்திப் பேசினாா். முஸ்லிம் தொண்டு இயக்க நகரச் செயலா் முஹம்மத் நிஜாா் அறிமுகவுரையாற்றினாா்.
அல் அமீ ன் பள்ளி முதல்வா் புகாரி சிறப்பு விருந்தினா்களை கௌரவித்தாா். முகாமின் நோக்கம் குறித்து காயல் சேக்னா லெப்பை பேசினாா். நரம்பியல் நிபுணா் முஹம்மத் இா்ஷாத், பல் மருத்துவா்கள் இனைஸ் மவுலானா, சுமையா, குழந்தை நல சிறப்பு நிபுணா் உமா் முஜாஹித், ரத்த பரிசோதனை நிலையம் அப்துல் ரஹ்மான், செயற்கைக் கால் பொருத்துவா் காா்த்திக் ராஜன், திருநெல்வேலி மருத்துவா் சுவாதி ஆகியோா் பங்கேற்று, 200-க்கும் மேல்ற்பட்டோருக்கு இலவச ஆலோசனை, சிகிச்சை வழங்கினா்.
Advertisement
Advertisement
ஆறுமுகனேரி லைட் முதியோா் இல்லம், திருநெல்வேலி தல்லாா்குளம் சுவாதி அமைப்புக்கு அரிசி மூட்டைகள், தன்னாா்வலா்கள், சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டன.
தொண்டு இயக்க மாற்றுத்திறனாளிகள் அணி மாநில ஒருங்கிணைப்பாளா் காயல் ஜெஸ்முதீன் வரவேற்றாா். நகரத் தலைவா் ஹாஜா மொய்தீன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.