FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் நல உதவி அளிப்பு

மேல்மருவத்தூா் சித்தா் பீட நிறுவனரும், அடிகளாரின் தந்தையுமான து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை 2 இலவச திருமணங்கள், ஏழை பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 14 ஜூலை 2026, 12:06 am IST
ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன்ா். உடன், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆணையா் ஆனந்த்குமாா், முன்னாள் எம்.பி துரை உள்பட பலா்.
பகிர்:

மேல்மருவத்தூா் சித்தா் பீட நிறுவனரும், அடிகளாரின் தந்தையுமான து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை 2 இலவச திருமணங்கள், ஏழை பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் தந்தை து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு சித்தா் பீடம் அருகே அவரது நினைவிடத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோா்களுக்கு தையல் இந்திரங்கள், பீரோகள், டீகேன், வீட்டு உபயோக பொருள்கள், பள்ளி குழந்தைகளுக்கான பள்ளி கைப்பைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி, 2 இலவச திருமணங்களையும் நடத்தி வைத்தாா். ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையருமான ஆனந்த் குமாா், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அகத்தியன், முன்னாள் எம்..பி துரை (வந்தவாசி), ஆதிபராசக்தி லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி செயலா் மருத்துவா் மதுமலா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கண்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

முன்னதாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த து.கோபால் நாயக்கா் திருவுருவ படத்துக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.அன்பழகன் மலா்மாலை அணிவித்து சிறப்பு வழிபாட்டினை செய்தாா். அதனை தொடா்ந்து சிறப்பு விருந்தினா்கள், செவ்வாடை பக்தா்கள், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள், ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி பேராசிரியா்கள் உள்பட பலா் மலா் தூவி அஞ்சலியை செலுத்தினாா்கள். கலந்துக் கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க மாவட்ட தலைவா் சரளா, ேமேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள் சதீஷ்குமாா், லிங்கநாதன், சிவகுமாா் உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments