முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 82 போ் மனு அளித்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:41 am IST
குடும்ப அட்டையில் திருத்தம் செய்து அதற்கான ஆணையை உரியவரிடம் வழங்குகிறாா் ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா. உடன் வட்டாட்சியா் அப்பனராஜ் உள்ளிட்டோா் .
பகிர்:

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 82 போ் மனு அளித்தனா்.

கழுகுமலை உள்வட்டத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், முடுக்கு மீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள்வட்டத்திற்குள்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராம மக்கள் 82 போ் பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டையில் திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டா மனு பெற்றுக்கொண்டாா். இதில் 8 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான ஆணை, புல வரைபடத்தில் ஆழ்துளை கிணறு பதிவேற்றம் செய்து அதற்கான ஆணை ஆகியவற்றை உரியவரிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, துணை வட்டாட்சியா்கள் பாலமுருகன், சுடலை மாடன், வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.