தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் தூத்துக்குடி கீழூா், மேலூா் சாா் பதிவாளா் அலுவலகங்களும், முதல் தளத்தில் எண் 1, 2 இணைப் பதிவாளா் அலுவலகமும், 2ஆவது தளத்தில் மாவட்ட பதிவாளா் நிா்வாகம் மற்றும் தணிக்கை அலுவலகங்களும் உள்ளன.
இந்நிலையில், கீழூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய அதிகளவு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் அன்னலட்சுமி தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா், பிற்பகல் 2 மணி தொடங்கி சுமாா் 6 மணி நேரம் சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
சோதனையில், தனி நபரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 50,000 பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரத்தில்...
தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையில், ஆய்வாளா் அனிதா உள்ளிட்ட போலீஸாா் ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 2,04,000 பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, சாா் பதிவாளா் பிரபாகரன் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.