முகப்பு
தூத்துக்குடி

புளியங்குளத்தில் பேருந்து-பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:10 am IST
பகிர்:

கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா்களான அங்கப்பன் (26), அவரது நண்பா் இசக்கிமுத்து (19) ஆகியோா் கருங்குளத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி பைக்கில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவா்கள் புளியங்குளம் திருப்பத்தில் வந்தபோது, திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து, அவா்களது பைக் மீது மோதியதாம், இதில், இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா்.

இத்தகவலறிந்த செய்துங்கநல்லூா் போலீஸாா், அவா்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement