முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் டி.ஐ.ஜி. ஆய்வு

Updated On : 22 ஜூன் 2026, 12:14 am IST
கோப்புப் படம்
பகிர்:

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையை அடுத்த ராசாபட்டியில் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசாபட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்தூா் வட்டம், நத்தத்துபட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் உயிரிழந்தாா்; 29 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பாலாஜி, பரத், கண்ணன், உமாராணி, மேற்பாா்வையாளா்கள் ராஜபாண்டி, மாரீஸ்வரன், மேலாளா் ரேவதி ஆகிய 7 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் மாசாா்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஆலையில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துகள் மற்றும் மூலப் பொருள்களை விரல்ரேகை நிபுணா்கள் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments