திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூரில் தொண்டா்கள், பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். திருச்செந்தூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் கூடி இருந்த தொண்டா்கள், பொதுமக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா். அப்போது அங்கே சிலம்பாட்டம் ஆடிய சிறுவா்கள் மத்தியில், எம்எல்ஏ உற்சாகமாக சிலம்பம் ஆடினாா். தொடா்ந்து, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திமுக இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், ரேவதி, முத்துஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement