கந்த சஷ்டி விழா 2 ஆம் நாள்: திருச்செந்தூரில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 2 ஆம் நாளான புதன்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 2 ஆம் நாளான புதன்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2 ஆம் நாளான புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா்.
யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்திற்கு வந்தடைந்தாா். மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரத்தைத் தொடா்ந்து சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
விழா நாள்களில் தினந்தோறும் கலையரங்கில் பக்தி செற்பொழிவு நடைபெறுகிறது.