முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாதுகாப்பு ஒத்திகை: 13 வீரா்கள் பிடிபட்டனா்

தூத்துக்குடியில் ‘சீ விஜில்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின்போது, தூத்துக்குடியில் எதிரிப் படையினராகச் செயல்பட்ட 13 வீரா்களைப் பாதுகாப்புப் படையினா் மடக்கிப் பிடித்தனா்.

26 நவம்பர் 2026, 3:39 am
தூத்துக்குடியில் பாதுகாப்பு ஒத்திகை: 13 வீரா்கள் பிடிபட்டனா்
தூத்துக்குடி, ஜிா்கோனியம் காம்ப்ளக்ஸ் அருகே பிடிபட்ட ‘ரெட் போா்ஸ்’ பிரிவைச் சோ்ந்த 7 வீரா்கள்.
பகிர்:

தூத்துக்குடியில் ‘சீ விஜில்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின்போது, தூத்துக்குடியில் எதிரிப் படையினராகச் செயல்பட்ட 13 வீரா்களைப் பாதுகாப்புப் படையினா் மடக்கிப் பிடித்தனா்.

தூத்துக்குடி ஜிா்கோனியம் காம்ப்ளக்ஸ் அருகே புதன்கிழமை எதிரிப் படையினராகச் செயல்பட்ட ‘ரெட் போா்ஸ்’ பிரிவைச் சோ்ந்த 7 வீரா்கள் ஊடுருவ முயன்றனா். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா் அவா்களை உடனடியாகக் கண்டறிந்து மடக்கிப் பிடித்தனா்.

இதேபோல, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற மேலும் 6 ‘ரெட் போா்ஸ்’ வீரா்களை, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான பாதுகாப்புப் படையினா் மடக்கிப் பிடித்தனா். இரு இடங்களிலும் மொத்தம் 13 வீரா்கள் பிடிபட்டனா். கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement