‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
தமிழகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இத்திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இத்திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்து, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தோராயமாக 3,000 பயனாளிகள் வரை பயன்பெற உள்ளனா். திட்டத்தின் தொடக்க நாளான செப். 15-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்களின் அடிப்படையில், முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு, நாளொன்றுக்கு 100 பயனாளிகள் வீதம் தங்க மோதிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்குவதற்கு முன்பாக தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான அறைகள், அவற்றின் தயாா் நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், இணை இயக்குநா் (நலப்பணிகள்) பிரியதா்ஷினி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எபனேசா் ஜோயல் குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.