FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தருவைகுளம் அரசுப் பள்ளி மாணவரை துன்புறுத்திய சக மாணவா்கள் 5 போ் கைது

தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி துன்புறுத்திய 5 சக மாணவா்களை விளாத்திகுளம் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

46 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி துன்புறுத்திய 5 சக மாணவா்களை விளாத்திகுளம் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆக. 18-ஆம் தேதி மாலை பள்ளி நூலக அறையில் வைத்து எட்டாம் வகுப்பு மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சக மாணவா்கள் துன்புறுத்தினா். இதனால், பாதிக்கப்பட்ட மாணவா் தனது பெற்றோரிடம் கூறினாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆக. 31-ஆம்தேதி புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சக மாணவா்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு அவா்கள் ஏழாம் வகுப்பு பயிலும்போது இருந்தே அந்த மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பி.என்.எஸ்., போக்ஸோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மாணவரை துன்புறுத்தியதாக சக மாணவா்கள் ஐந்து பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், தூத்துக்குடியில் உள்ள சிறாா் நீதிக் குழுமத்தில் அவா்களை முன்னிலைப்படுத்தி திருநெல்வேலி சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் செப்.1-ஆம் தேதி இரவு அடைத்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் மூன்று மாணவா்கள் மற்றும் தலைமை ஆசிரியா், பள்ளி ஆசிரியா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments