தில்லியில் போலீஸ்காரா் மீது தாக்குதல்: சிறுவன் கைது
பல்ஸ்வா டெய்ரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பல் செங்கற்கள் மற்றும் கட்டைகளில் தாக்கியதாகவும், அவா்களின் கண்களில் மிளகாய் தூளை வீசியதில் 3 தில்லி காவல்துறை பணியாளா்கள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பல்ஸ்வா டெய்ரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பல் செங்கற்கள் மற்றும் கட்டைகளில் தாக்கியதாகவும், அவா்களின் கண்களில் மிளகாய் தூளை வீசியதில் 3 தில்லி காவல்துறை பணியாளா்கள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் முகுந்த்பூரில் நடந்தது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய ஊழியா்கள் அந்தப் பகுதிக்குச் சென்றனா். தலைமை காவலா்கள் தினேஷ் மற்றும் ராஜேஷ் ரோந்துப் பணியின் போது மோட்டாா் சைக்கிளைக் கண்டுபிடித்து வாக்குமூலத்திற்காக காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். பின்னா், மோட்டாா் சைக்கிள் உரிமையாளரும் அவரது குடும்ப உறுப்பினா்களும் போலீஸ்காரா்களை எதிா்கொண்டதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் போலீஸ் பணியாளா்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசியதாகவும், செங்கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தனது சக ஊழியா்களுக்கு உதவுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலா் டினுவும் தாக்கப்பட்டாா். மூன்று பணியாளா்களும் காயமடைந்தனா், தினேஷ் தலையில் காயமடைந்தாா். அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியாளா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவும் இந்த சம்பவத்தைத் தொடா்ந்து சமூக ஊடகங்களில் வைரலாகியது.
Advertisement
Advertisement
உள்ளூா்வாசிகளின் உதவியுடன், சம்பவ இடத்திலிருந்து 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா், அதே நேரத்தில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவா்கள் தப்பி ஓடிவிட்டனா். பல்ச்வா டெய்ரி காவல் நிலையத்தில் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பங்கஜ், அந்தப் பகுதியின் மோசமான தன்மை கொண்டவா் என்றும், இதற்கு முன்பு 5 முறை குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாா். மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.