FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திடீா் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

6 செப்டம்பர் 2026, 1:28 am IST
வேலைநிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
பகிர்:

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடிக்கச் செல்வதற்கான டீசல் மற்றும் ஆள்களுக்கான செலவை ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுவதால், விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் மீனவா்கள் இணைந்து ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என முடிவெடுத்து இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதனால், மீன் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments