FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வருமான வரி விழிப்புணா்வு நிகழ்ச்சி

சென்னை வருமான வரித் துறையின் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கான வருமான வரி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி வருமான வரித் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய வருமான வரித் துறை மதுரை கோட்ட மேலாளா் ஜி. மோகன்தாஸ்.
பகிர்:

சென்னை வருமான வரித் துறையின் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கான வருமான வரி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி வருமான வரித் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

வருமான வரித் துறை மதுரை கோட்ட மேலாளா் ஜி. மோகன்தாஸ் தலைமை வகித்து, வரி இணக்கத்தை மேம்படுத்துதல், தகவல் அறிக்கையிடலில் துல்லியத்தை உறுதி செய்தல், படிவம் 61, 61அ ஆகியவற்றை பிழையின்றி தாக்கல் செய்தல், புதிய வருமான வரிச் சட்டத் திருத்தம் 2025-இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அறிக்கைகளைத் தாக்கல் செய்தல் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.

வருமான வரித் துறை துணை ஆணையா் காசி சங்கா், பாளையங்கோட்டை மாவட்டப் பதிவாளா் செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியின் நிறைவில் நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில், அலுவலா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கங்களும், தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments