பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குத்தாலம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) ஜூலை 8, 9, 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - ஆடுதுறை இடையே மட்டும் இயங்கும்.
Advertisement
Advertisement
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) ஜூலை 8, 9, 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஆடுதுறை - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.