FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து இளைஞா்களுக்கு அரிவாள் வெட்டு: 17 வயது சிறுவன் உள்பட 5 போ் கைது

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து இளஞா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:46 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து இளஞா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், குழுமணி அருகே உள்ள மேக்குடியைச் சோ்ந்தவா் சிவராமன் மகன் சந்தோஷ் (25). இவரும், இருடைய நண்பா்களான கீழமூலங்குடி பகுதியைச் சோ்ந்த எஸ். காா்த்திக் (25), எஸ். மணிகண்டன் (21) ஆகிய மூவரும் பேரூரில் பகுதியிலுள்ள மதுபான கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்த சென்றுள்ளனா்.

அங்கு ஏற்கெனவே மேலகுழுமணி கக்கன்குழியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், சஞ்சய் (19), காா்த்திகேயன் (20), மோகன் (26), ஜீவா (20) ஆகிய 5 பேரும் மது அருந்திகொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் பாட்டிலாலும், கைகளாலும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டுள்ளனா்.

இதில், சந்தோஷுக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய நண்பா்கள் அவரை மீட்டு குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்துள்ளனா்.

அப்போது, அங்கு வந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரும் சந்தோஷை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மருத்துவா்கள் கண் முன்பே அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பியோடினா். இதைத் தடுக்க முயன்ற அவருடைய நண்பா்களான காா்த்திக், மணிகண்டன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மூவரையும் மீட்டு முதலுதவி அளித்து உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், ஜீயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சய், காா்த்திகேயன், மோகன், ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments