FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பக்கவாட்டு சுவர் இடிந்து விழும்  நிலையில் கொள்ளிட பாலம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கொள்ளிட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:08 am IST
பகிர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கொள்ளிட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
திருமானூர் கொள்ளிடம் பாலம் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சுமார் 1.30 கி.மீ தூரம் உள்ள இந்தப் பாலத்தில், பக்கவாட்டுச் சுவர் உடைந்தும் சிதிலமடைந்தும் உள்ளது. தற்போது அதிகளவு கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் கரையோர மக்களிடையேயும், திருமானூர் - அரியலூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் கூறியது:  40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச்  சுவர் சேதமடைந்தும், பாலத்தின் குறுக்கே ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும் உள்ளது. ஆகையால் இந்தப் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும். 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் பாலம் இருக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments