மூதாட்டியைத் தாக்கிய இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மூதாட்டியைத் தாக்கிய இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மூதாட்டியைத் தாக்கிய இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றார். இவரது மனைவி மணிமேகலை (28). இவர், தனது 3 பெண் குழந்தைகள், மாமியார் சரஸ்வதி (60) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் கண்ணன்(எ) தமிழரசன் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சரவஸ்வதிக்கும், தமிழரசனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த தமிழரசன், சரவஸ்தியை தகாத வார்த்தையால் திட்டித் தாக்கியுள்ளார். மேலும் வீட்டின் கதவை சேதப்படுத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சரவஸ்வதி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து சரவஸ்வதி மருமகள் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து தமிழரசனை சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.