தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் டீ கப்புகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி உத்தரவின் பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ் குமார், அல்லிராணி தலைமையில் ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் தா. பழூரிலுள்ள மளிகை கடைகள், டீ கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், சாலையோர கடைகள் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் டீ கப்புகள், கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்று வணிகர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறியது:
அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவோர் மீது அபராதத் தொகை விதிக்கப்படும். தா.பழூரில் முற்றிலும் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத பகுதியாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.