நாளை அம்மா திட்ட முகாம்
அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்துக்குள்பட்ட கரைவெட்டி, கருப்பிலாக் கட்டளை, உடையவர் தீயனூர், உதயநத்தம் (கி) நமங்குணம், வரதராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ் தொடர்பாக தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதோடு, அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.