முன்னாள் படைவீரர்களுக்கு இரவு நேர பாதுகாவலர் பணி
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுக்குள்ளும், எழுத, படிக்கத் தெரிந்தும்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுக்குள்ளும், எழுத, படிக்கத் தெரிந்தும் இருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 5, 000.
விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் படை விலகல் சான்று, முன்னாள் படை வீரரின் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், 72-ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் என்ற முகவரியில் பெறலாம் என ஆட்சியர் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.