FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"ரெட்டித்தத்தூரில் 76 எம்பிசி-யினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்'

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ரெட்டித்தத்தூர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தபட்ட குடும்பத்தை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ரெட்டித்தத்தூர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தபட்ட குடும்பத்தைச் சேர்ந்த 76 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறும் விதமாக பல எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டமான இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான  மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசின் சீரிய செயல்பாட்டினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 76 பேருக்கு ரூ.36 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த 20,678 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.05 கோடியில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக 31,507, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு ரூ.196.06 லட்சத்தில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments