FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூரில் வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

கா்நாடகத்தில் அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற அம்மாநில வனத் துறையினரைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கா்நாடகத்தில் அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற அம்மாநில வனத் துறையினரைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்பாவித் தமிழா்களை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கா்நாடக மாநில அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரியில் நீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கடந்த 3 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை அவா்கள் நீதிமன்ற வளாகம் முன் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம். ராஜா, பொருளாளா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல. சுகுமாா், அருணன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments