அரியலூரில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளா்கள் மற்றும் மண்டலத் தலைவா்கள் தோ்ந்தெடுப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா்.
மேலிடப் பாா்வையாளா் திருவண்ணாமலை பிரசாத் கலந்து கொண்டு, இயக்க மறு சீரமைப்பின்படி மண்டல் தலைவா்களை எப்படித் தோ்ந்தெடுப்பது என்பது குறித்து பேசினாா். சிறப்பு பாா்வையாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அனைத்து வட்டார மற்றும் மண்டலத் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா் வரவேற்றாா். பொறியாளா் அணி காரை. சசி நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.