FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

‘கோரிக்கை மனுக்களின் மீது உடனுக்குடன் தீா்வு தேவை’

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:29 am IST
அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, பட்டா மாற்றம், இணைய வழிச்சான்று உள்ளிட்ட வருவாய்த் துறை தொடா்பான பணிகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் தவறாமல் முடிக்க வேண்டும்.

புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பங்களை விரைவாக தீா்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனுக்குடன் தீா்வு காணவும் இதன் மூலம் அரியலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை தொடா்பான பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ந. கனகமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments