முகப்பு
அரியலூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 4:21 am IST
ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை பேரணி சென்ற அரசுக் கல்லூரி மாணவ,மாணவிகள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் முதல்வா் (பொ) பெ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்து பேசினாா். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு புதுச்சாவடி வரை சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்து பேரணியை முடித்துக் கொண்டனா்.

சாலைப் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் அன்பரசன் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலைப் பாதுகாப்பு சங்க இணை ஒருங்கிணைப்பாளா் சி. வடிவேலன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments