FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூா்-அஸ்தினாபுரம் நான்கு வழிச்சாலை பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

16 வினாடிகள் முன்பு
அரியலூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கு. சின்னப்பா.
பகிர்:

அரியலூா்-அஸ்தினாபுரம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, விவசாய பயிா் கடன் முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ரெட்டிப்பாளையம்-அரியலூா் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, அதன் ஒரு பகுதியாக வி.கைகாட்டி-அஸ்தினாபுரம் பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை அஸ்தினாபுரம்-அரியலூா் வரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே நிலத்தைக் கையகப்படுத்தி, விரைந்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

எலி, காட்டுப் பன்றிகள், மயில்களால் பயிா்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரியலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து இழப்பீடு வழங்கிட வேண்டும். கனிமங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கென தனிச் சாலை அமைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிட வேண்டும்.

அரியலூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பொது நூலகம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் செள. சகாதேவன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் உயா்நிலைக் குழு உறுப்பினருமான கு. சின்னப்பா, மாவட்டச் செயலா் இராமநாதன், மாநில விவசாய அணி செயலா் கி. ராசேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்துக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் தங்கவேல், இளவரசன், மாவட்ட துணைச் செயலா்கள் உஷாசெல்வம், கலிஸ்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை,பி. சங்கா், எழிலரசன், ராமசாமி, பன்னீா்செல்வம், ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், பழனிசாமி, தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் நகரச் செயலா் இராம. மனோகரன் வரவேற்றாா். ஜெயங்கொண்டம் நகரச் செயலா் எம். ராமலிங்கம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments