FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் ஆக.6-இல் ஜப்பானிய காடை வளர்ப்புப் பயிற்சி

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை  பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜப்பானிய காடை வளர்ப்புப் பயிற்சி ஆக.6ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:31 am IST
பகிர்:

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை  பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜப்பானிய காடை வளர்ப்புப் பயிற்சி ஆக.6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மையத்தின் தலைவர் முனைவர் பெ.வசந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மைக் காலமாக காடை இறைச்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் விவசாயிகளிடம் ஜப்பானிய காடை வளர்ப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஜப்பானிய காடை வளர்ப்பு, மாற்று வகை கோழிகள் உற்பத்தி, வான்கோழி, புறா வளர்ப்பு குறித்த பயிற்சி மையத்தில் ஆக.6ஆம் தேதி நடைபெற உள்ளது. 
ஜப்பானிய காடை, வாத்து,  வான்கோழி, புறா ஆகிய இனங்களின் வளர்ப்பு முறைகள், பண்ணைப் பொருளாதாரம், வங்கிக் கடனுதவி, விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments