டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி
கரூரில் டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூரில் டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலை ஏமூர் ரோட்டைச் சேர்ந்தவர் வடிவேல்(34). இவர் வெள்ளியணையை அடுத்த பாகநத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பணிமுடித்து இரு சக்கர வாகனத்தில் தம்மநாயக்கன்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வடிவேலை வழிமறித்து நிறுத்தி உருட்டுக்கட்டையால் தாக்கி, அவரிடம் பணம் பறிக்க முயன்றனர். ஆனால் வடிவேலுவிடம் பணம் இல்லாததால் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.