விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற காவலருக்கு பாராட்டு
காவல்துறை மண்டல விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற காவலருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
காவல்துறை மண்டல விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற காவலருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
சென்னையில் 62ஆவது காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான சிறந்த புகைப்படக் கலைஞர்கள் தேர்வு போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த புகைப்படக் கலைஞர்கள் பிரிவில் கரூர் மாவட்ட காவல் துறை புகைப்படப்பிரிவில் பணியாற்றும் கலைவாணன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல, திருச்சியில் நடைபெற்ற காவல் துறையினருக்கான 58வது மாநில அளவிலான தடகளப் போட்டியில் கரூர் ஆயுதப்படை காவலர் எம்.துரைராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 200 மீட்டரில் மூன்றாமிடம் பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வரவழைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் பாராட்டினார். ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.சிற்றரசு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜே.அருள்மொழி அரசு ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.