அய்யம்பாளையத்தில் மது விற்றவர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே அரசு அனுமதியின்றி மது விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம் அருகே அரசு அனுமதியின்றி மது விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள புங்கோடை காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (45). இவர் உரிய அனுமதியதின்றி தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பதாக வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அங்கு மது விற்றுக்கொண்டிருந்த சுப்ரமணியை கைதுசெய்து, அவரிடமிருந்து 5 பாட்டில் மதுவை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.