கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கம்
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம், காவாளிபாளையத்தைச் சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி. திமுகவைச் சேர்ந்த இவர் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.
இவர் 1990, 1997 ஆகிய இருமுறை பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழுத் தலைவராவும், 2004-ல் கரூர் எம்பியாகவும் இருந்தவர்.
2011-ல் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் கரூர் மாவட்டம், மாயனூரில் பாலீத்தீன் சிமென்ட் பைகள் தயாரிக்கும் பேக்கேஜிங் நிறுவனம், புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோயில் பகுதியில் காகித ஆலையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தாததால் இவரது சொத்துகளை பாரத ஸ்டேட் வங்கி கையகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
கேசி. பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து மாயனூர், புதுச்சேரி நிறுவனங்கள் பெயரில் ரூ. 173 கோடி கடனாகப் பெறப்பட்டுள்ளது.
கடன்தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தாததால் கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஐடிபி வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடன்தாரர் அடமானம் வைத்து உத்தரவாதம் அளித்த சொத்துக்கள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.