குளித்தலை காவிரி பாலத்தை சோதிக்க வலியுறுத்தல்
குளித்தலை காவிரி ஆறு பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்க பொதுமக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
குளித்தலை காவிரி ஆறு பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்க பொதுமக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: குளித்தலை-முசிறியை இணைக்கும் தந்தை பெரியார் காவிரி பாலத்தின் 20க்கும் மேற்பட்ட தூண்களில் சமீபத்தில் ஆற்றில் சென்ற அதிகளவு நீரால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான இருச்சக்கர, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பாலத்தின் உறுதித்தன்மையை சோதித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.மேலும் மாயனூர் கதவணையில் ஆற்று மணல் அள்ளுவதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். குளித்தலை பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.