FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

எஸ்.ஐ. பைக் திருட்டு சம்பவம்: தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

கரூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளரின் பைக் திருடுபோன சம்பவத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 7 ஜூன் 2018, 9:19 am IST
பகிர்:

கரூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளரின் பைக் திருடுபோன சம்பவத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் அழகுராமு. காவல் நிலையத்திற்குள் வைத்திருந்த இவரது பைக்கை திங்கள்கிழமை இரவு யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அப்போது காவல் நிலையத்தில் இரவு பணியில் தலைமைக் காவலர் பழனிவேலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் தற்காலிக பணி நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார். 
இளைஞர் கைது: இந்நிலையில் உதவி ஆய்வாளரின் பைக்கை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், லந்தகோட்டையைச் சேர்ந்த விஸ்வநாதனை (26) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments