வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 147 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூரில் அவரது சிலைக்கு புதன்கிழமை பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 147 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூரில் அவரது சிலைக்கு புதன்கிழமை பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 147 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரால் புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூரில், தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு வ.உ.சி பேரவை மற்றும் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனைத்து வெள்ளாளர் சங்க கூட்டமைப்புத் தலைவர் மலைக்கொளுந்து தலைமை வகித்தார். இதில், வ.உ.சி.பேரவை தலைவர் கே.மகேஷ், தமிழ் மாநில காங்கிரசின் சிவசாமி மற்றும் வ.உ.சி.பேரவையினர், சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள வாங்கலம்மன் ஸ்டோர் முன்பு இருந்து ஊர்வலமாக தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வ.உ.சி. சிலை வரை மேள தாளம் முழங்க ஊர்வலமாக பட்டாசு வெடித்து வந்தனர்.
திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் நன்னியூர்ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜிம்சிவா உள்ளிட்டோரும், முன்னாள் தாந்தோணி நகரச் செயலாளர் ரவி தலைமையிலும் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் இயக்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் நன்மாறன் தலைமையிலும், பாஜ சார்பில் மாவட்டத்தலைவர் முருகானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.