அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செப். 16-ல் சைக்கிள் போட்டி
வரும் 16-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
வரும் 16-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர்(பொ) புண்ணியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கும் போட்டியில் பங்கேற்கும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10.கி.மீ.தூரமும், 15, 17-வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது சொந்த சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களுடன் வந்து பங்கேற்க வேண்டும்.
சாதாரண மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட வண்டிகளை பயன்படுத்தக் கூடாது. போட்டியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடிப்பவர்களுக்கு பரிசு, சான்றிதழ்,4முதல் 10 இடங்கள் பிடிப்பவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வயதுச்சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வரவேண்டும். மேலும் பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 74017-03493,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.