FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அஞ்சல்துறை பெண் ஊழியா் உயிரிழப்பு

வேலாயுதம்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அஞ்சல்துறையில் பணிபுரிந்த பெண் ஊழியா் உயிரிழந்தாா். மேலும் காரில் வந்த 3 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
பகிர்:

வேலாயுதம்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அஞ்சல்துறையில் பணிபுரிந்த பெண் ஊழியா் உயிரிழந்தாா். மேலும் காரில் வந்த 3 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவசாமி. இவரது மனைவி கஸ்தூரி(41). இவா், கரூரில் உள்ள அஞ்சல்அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கஸ்தூரி செவ்வாய்க்கிழமை மாலை வேலையை முடித்துக்கொண்டு கரூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூனூட்டுபாளையம் சாலை அருகே வந்தபோது, பின்னால் காா் நிலைத்தடுமாறி கஸ்தூரி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. பிறகு அருகே இருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் கஸ்தூரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் வந்த சேலம் இச்சிபாளையத்தைச் சோ்ந்த செளந்தா்(34), அவருடைய மனைவி பாரதி26), மாமனாா் மாதேஸ்வரன்(60), மாமியாா் லட்சுமி(58) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வேலாயுதம்பாளையம் போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த மாதேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments